குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
X
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூபாய் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை - டாஸ்மாக் அதிகாரி தகவல்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கையொட்டி மதுக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் சனிக்கிழமை மதுபானக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சராசரியாக நாள்தோறும் மூன்று கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகும்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழம டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் மது பிரியர்கள் முன்தினம் சனிக்கிழமை மொத்தமாக மதுபானங்களை வாங்கி குவித்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் ஒரு நாள் விற்பனை ரூபாய் 4.25 கோடியாக உயர்ந்துள்ளது என டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!