கும்பப்பூ சாகுபடி தீவிரம்: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பூதப்பாண்டி, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கும்பப்பூ சாகுபடிக்கான நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் விவசாயமாக நெல் விவசாயம் இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை 45 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெற்ற நெல் விவசாயம், நாளடைவில் விவசாய பூமி வீட்டு மனைகளாக ஆக்கப்பட்டதால், இன்று ஆறாயிரம் ஹெக்டேராக குறைந்து போனது.
இந்நிலையில் கண்ணிப்பூ சாகுபடியின் அறுவடை பணிகள் நிறைவு பெற்றதால், கும்பப்பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திட்டுவிளை, பூதப்பாண்டி, தெரிசனன்கோப்பு, சுசீந்திரம், மருங்கூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கும்பப்பூ சாகுபடிக்கான நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையானது, கும்பப்பூ சாகுபடிக்கு கைகொடுப்பதோடு மழையால் அணைகளும் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu