கேரளா எல்லை சென்றது குமரி சாமி சிலைகள்: இரு மாநில போலீசார் ராஜ மரியாதை
தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் குமரி சாமி சிலைகளுக்கு இரு மாநில போலீசார் துப்பாக்கு ஏந்தி அணிவகுத்து ராஜ மரியாதை செலுத்தினர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் 9 நாட்கள் நவராத்திரிவிழா நடைபெற உள்ளது. இந்த நவராத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலைகள் திராவிதாங்கூர் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக நேற்று காலை பத்பநாபபுரம் அரண்மனையிலிருத்து புறப்பட்டது.
சாமி சிலைகளை இன்று காலை தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் கேரளா அறநிலைத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரளா அறநிலைத்துறை தலைவர் வாசு கலந்து கொண்டு சாமி சிலைகளை வரவேற்றார்.
இந்த வருடம் கொரோனா தோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கேரளா காவல்துறையினர் குமரிக்கு வந்து மரியாதை செலுத்தாத நிலையில் களியக்காவிளையில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சாமி சிலைகளுக்கு தமிழக கேரளா காவல்துறையினர் துப்பாக்கு ஏந்தி அணிவகுத்து ராஜ மரியாதை செலுத்தி சாமி சிலைகளை கேரளாவிற்கு எடுத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu