பக்தர்கள் சூழ பத்துக்காணி காளிமலைக்கு சென்ற சமுத்திர கிரி ரதம்

Kalimalai
Kalimalai-கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், ஆதிகால மலை கோவிலாகவும் உள்ளது காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவில் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து, 3000 அடி உயரத்தில் அமைந்த இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா இன்று தொடங்கி வருகிற 15–ந் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
ஒவ்வொரு வருடமும், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடிகட்டி புனிதநீர் சுமந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி இந்த வருட துர்காஷ்டமிக்கான பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு நடந்தது.
'சமுத்திர கிரி ரத யாத்திரை' என்ற பெயரில் தொடங்கிய இந்த யாத்திரையை கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜாராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாதயாத்திரையின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட ரதமும் அதனை தொடர்ந்து பக்தர்களும் சென்றனர். இந்த பாதயாதிரையானது சுசீந்திரம், பார்வதிபுரம், தக்கலை, மார்த்தாண்டம், ஆற்றூர், சிதறால், களியல், கடையாலுமூடு வழியாக பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்று அடைகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu