கோடை மழையால் குளிர்ந்த குமரி

கோடை மழையால் குளிர்ந்த குமரி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது, கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பரவலான மழை நீடித்து வருகிறது.

இதனிடையே விளவங்கோடு, குழித்துறை, நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நீண்ட நேரம் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இதே போன்று அணைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும் தொடரும் மழையால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தற்போது பெய்த மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
future ai robot technology