ஓமிக்கிரான் எதிரொலி: குமரி எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

ஓமிக்கிரான் எதிரொலி: குமரி எல்லையில்  கண்காணிப்பு தீவிரம்
X

களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடி

ஓமிக்கிரான் எதிரொலியாக தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதையடுத்து தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் கூடுதல் சோதனை சாவடிகளை அமைத்து கட்டுப்பாடுகளை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சம் நிலவி வருகிறது. தென்ஆப்ரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தென் ஆப்பிரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் விமானத்தில் வந்த 192 பேர், வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil