நுாதன முறையில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்: விரட்டி பிடித்த பாேலீசார்

நுாதன முறையில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்: விரட்டி பிடித்த பாேலீசார்
X

நுாதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்யை பிடித்த பெண் போலீசாருடன் படகு உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு படகில் சென்று மீன்பிடி தொழில் செய்ய அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது.

இந்த மண்ணெண்ணெயை ஒரு சில வியாபாரிகள் அதிக லாபத்திற்கு கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர், இந்நிலையில் நித்திரவிளை போலீசார் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னத்துறை சாலை வழியாக ஒரு பிக்கப் வாகனம் ஒன்று பைபர் படகு ஒன்றை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துள்ளது. இதனை கண்ட போலீசார் பிக்கப் வாகனத்தை நிறுத்த சைகை காட்டிய போது வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக கேரளாவை நோக்கி வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.

உடனே சுதாகரித்து கொண்ட போலீசார் அந்த வாகனத்தை பின்தொடரந்து விரட்டி சென்று கிராத்தூர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை காவல்நிலையம் கொண்டு வந்து பரிசோதனை செய்த போது அந்த வாகனத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த பைபர் படகின் உள்ளே நூதன முறையில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 கேன்களில் 700 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் படகின் உள்ளே இருந்த மண்ணெண்ணெய் கேன்களை கீழே எடுத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த பெண்மணி ஒருவர் தனது படகு என்றும் கேரளாவிற்கு தொழிலுக்கு செல்ல கொண்டு சென்ற மண்ணெண்ணெய் என்றும் அதனை விட்டுவிடுமாறு பங்குதந்தை போனில் பேசுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் மிரட்டலை கண்டு கொள்ளாமல் வாகனத்தையும் அதில் இருந்த மண்ணெண்ணெயையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil