கார் விபத்தில் உயிர் தப்பிய அமைச்சர்

கார் விபத்தில் உயிர் தப்பிய அமைச்சர்
X

விபத்துக்குள்ளான கேரள அமைச்சரின் கார், உள்படம்: கேரள அமைச்சர் சின்ஜு ராணி

கேரள மாநில பெண் அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியதில் சிறு காயங்களுடன் அமைச்சர் உயிர் தப்பினார்.

கேரளா மாநில அமைச்சரவையில் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக இருந்து வருபவர் ஜே. சின்ஜு ராணி, இவர் இடுக்கி மாவட்டத்திற்கு அரசு காரில் சென்று கொண்டிருந்த போது திருவல்லா அருகே சிலங்கா பைபாஸ் ரோட்டில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.

எதிரே வந்த அரசு பேருந்தின் மீது வாகனம் மோதாமல் இருக்க அமைச்சரின் கார் டிரைவர் வாகனத்தை வேகமாக திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் இருந்த மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது, இதில் நல்வாய்ப்பாக அமைச்சருக்கும் அமைச்சரின் துப்பாக்கி ஏந்திய காவலருக்கு சிறு காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து வேறு கார் வரவழைக்கப்பட்டு அந்த காரில் அமைச்சர் இடுக்கி மாவட்டம் புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story
ai in future agriculture