குமரியின் குற்றாலமாம் திற்பரப்பு அருவியை மூழ்கடித்தது கனமழை.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருகின்றது.
சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே அணைகளின் பாதுகாப்பு கருதி அணைகளிலில் இருந்து பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டிய நிலையில் அங்கிருந்து மணிக்கு 11 ஆயிரத்து 485 கனஅடி நீர் வெளியிடப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
திற்பரப்பு அருவியை மூழ்கடிக்கும் அளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் அங்குள்ள சிறுவர் பூங்கா, தடுப்பு வேலிகள், கல்மண்டபம் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி உள்ளன.
அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர் வெளியேறும் ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்தால் பாதிப்புகள் அதிகரிக்கும் என கருதப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu