கனமழை பாதிப்பு -நிவாரணம் தாமதத்தால் விவசாயிகள் வேதனை.

கனமழை பாதிப்பு -நிவாரணம் தாமதத்தால் விவசாயிகள் வேதனை.
X
கனமழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பட்டு உள்ள தாமதத்தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

யாஸ் புயல் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்தது, சுமார் 14 மணி நேரம் இடைவிடாது பெய்த இந்த கனமழை காரணமாக குமரிமாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது.

அணைகள் மூலம் வெளியேறிய உபரி நீர், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு, குளங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் நான்காயிரம் ஏக்கர் நிலபரப்பிலான விவசாயமும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து கணக்கெடுக்கவும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கவோ அரசு முன்வராததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்கை சீற்றங்களின் போது அமைச்சர்களும் அதிகாரிகளும் குமரிமாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட்டது என சுட்டிக்காட்டிய விவசாய அமைப்பினர் தற்போதைய அரசு கன்னியாகுமரி மாவட்டத்தை கண்டுகொல்லாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் உடனடியாக பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story