மழையால் குளிர்பிரதேசமான குமரி மாவட்டம்

மழையால் குளிர்பிரதேசமான குமரி மாவட்டம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1 மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது,

கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இதே போன்று மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் நீர் நிலை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு