தவ்தே புயலில் காணாமல் போன நிலத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு பின் அதிக அளவில் விவசாயத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது தவ்தே புயல்.
இந்த புயல் பாதிப்பின் போது குமரி மாவட்டத்தில் 2 வாரங்கள் தொடர் மழை பெய்து வந்ததால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது.இதனை தொடர்ந்து அணைகளின் பாதுகாப்பை கருதி மாவட்ட பொதுப்பணித்துறை நிர்வாகம் அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீரை வெளியேற்றினர்.
அப்போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போது பரக்காணி பகுதியில் கட்டபட்டு வந்த தடுப்பணை பணி காரணமாக வைக்கல்லூர் பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த சுமார் 3 ஏக்கர் நிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.அதோடு நிலத்தில் நின்றிருந்த வாழை, தென்னை, பப்பாளி உள்ளிட்ட விவசாய பயிர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் நில உரிமையாளர்களுக்கு பல இலட்சம் ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பேரிடர் முடிந்து இரண்டு மாதம் கடந்த பின்னரும் இதுவரை பாதிக்கபட்ட பகுதிகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு அந்த இடத்தில் மணல்களை நிரப்பி நிலத்தை சமபடுத்தி தருவதோடு உரிய இழப்பீடு தரவேண்டும்.
மீண்டும் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஆற்றில் நிலங்கள் அடித்து செல்லாமல் இருக்க ஆற்றின் இருபுறங்களிலும் பக்க சுவர் கட்டி பாதுகாக்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu