குமரி மலையோர மக்கள் பயன்பெற கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களான கோதையாறு, தச்சமலை, உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மலைவாழ் மக்களுக்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிட்சை அளிக்கும் வகையில் குலசேகரம் படநிலம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவகல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கபட்டது.
சேவை நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த சிகிட்சை மையத்தை தமிழக தகவல் தொழில்துட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார், இதனை தொடர்ந்து நோயாளிகளுக்கு அளிக்க இருக்கும் இயற்கை மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கையை கட்டுபடுத்தும் விதமாக மலையோர மக்கள் அதிகம் வாழும் குலசேகரம் பகுதியில் மத்திய சுகாதாரத்துறையின் ஆயுஷ் முறைபடி இயற்கை மருத்துவம் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று சிகிட்சை மையத்தில் முதற்கட்டமாக 50 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது, மேலும் நோயாளிகளுக்கு யோகா, சூரிய குளியல், இயற்கை உணவு உள்ளிட்ட முறையால் அமைக்கபட்டுள்ளது. மலையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu