மீனவர்கள் கரை திரும்ப குமரி ஆட்சியர் உத்தரவு.

மீனவர்கள் கரை திரும்ப குமரி ஆட்சியர் உத்தரவு.
X
அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் குமரி கடல் பகுதியில் வருகின்ற இரண்டு நாளைக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து குமரிமாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டள்ள செய்திகுறிப்பில், 12 மற்றும் 14 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். இன்று வியாழக்கிழமை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் லட்ச தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய கடற்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

14 மற்றும் 15ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் லட்சத் தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய கடற்பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். 14ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதியன்று கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுக்கக் கூடும்.

இதன் காரணமாக குமரி கடல் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி லட்சத்தீவுகள் மற்றும் மால தீவுகள் கடல் பகுதிகள் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய கடற்பகுதியில் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களுக்கு கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

எனவே குமரி மீனவர்கள் மேற்கூறிய நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஏற்கனவே கடலுக்குள் சென்று உள்ள மீனவர்கள் 14 ஆம் தேதி அன்று காலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!