குமரி எல்லை சோதனை சாவடியில் அலட்சியம்: நோய் தொற்று பரவும் அபாயம்

குமரி எல்லை சோதனை சாவடியில் அலட்சியம்: நோய் தொற்று பரவும் அபாயம்
X
குமரி சோதனை சாவடியில் தீவிரப்படுத்தப்படாத சோதனையால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை.

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு முப்பத்தி இரண்டாயிரம் நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரளாவில் இருந்து வருபவர்களால் நோய் தொற்று பரவுவதை தடுக்க குமரி மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு எல்லை மீறி சென்றதை சுட்டி காட்டிய மத்திய அரசு தமிழக சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த கேட்டு கொண்டது.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சோதனை சாவடிகளான களியக்காவிளை, ஊரம்பு, நெட்டா உள்ளிட்ட 7 சோதனை சாவடிகளில் எந்த வித சோதனைகளும் மேற்கொள்ளப்படாததால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சர்வ சாதாரணமாக குமரி மாவட்டம் வந்து செல்கிறது.

இதனால் குமரிமாவட்டத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளத்தோடு பொதுமக்களையும் அச்சப்பட வைத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!