குமரி மாவட்டத்தில் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவில் ஆர்ப்பரித்து காெட்டும் வெள்ள நீர்.

குமரியில் கனமழையை தொடர்ந்து தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.

நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் பரவலான மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இதேபோன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலான மழை தொடர்ந்து வருவதால் மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணைகளிலிருந்து பெருமளவில் நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்துவரும் பரவலான மழையானது கனமழையாக நீடித்தால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!