குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் 5வது நாளாக காட்டாற்று வெள்ளம்

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் 5வது நாளாக காட்டாற்று வெள்ளம்
X

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் 5 ஆவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் 5 ஆவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது, இந்த கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.

மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக கொட்டி வருகின்றது.

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இதுவரை காண முடியாத அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சிகள் தடுப்பு வேலிகளை தாண்டி தண்ணீர் வெளியே விழுகிறது.

Tags

Next Story