குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவ 17 ம் தேதி திருச்சூருடன் நிறுத்தப்படும்: தெற்கு ரயில்வே

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவ 17 ம் தேதி  திருச்சூருடன் நிறுத்தப்படும்: தெற்கு ரயில்வே
X

பைல் படம்.

நவம்பர் 17 ஆம் தேதி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பூங்குண்ணம்- திருச்சூர் யார்டு இடையே வரும் 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ரயில் எண் 06127 சென்னை எழும்பூர்- குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் 17ஆம் தேதி அன்று திருச்சூர் மற்றும் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படும். மேலும் இந்த ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்