விசைப்படகில் கேஸ் வெடித்து தீ விபத்து: தமிழக மீனவர்களின் படகுகள் சேதம்
தீப்பிடித்து எரிந்த படகு.
கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு, குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த மீனவர்கள் ஆள்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதால் தங்களது படகுகளில் சமைத்து சாப்பிட தேவையான உணவு பொருட்கள், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை தங்களது படகுகளிலேயே எடுத்து சென்று சமைத்து உண்டு வருவர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, கொச்சி முனம்பம் துறைமுகத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த மீனவர்களின் விசை படகுகள் துறைமுக படகு இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு படகில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பற்றி எரிந்து அருகில் இருந்த படகுகளிலும் பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், சத்தம் போட்டவாறு படகுகளில் இருந்து குதித்து தப்பித்தனர்.
இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீனவர்கள் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் படகில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீ பற்றி எரியக்கூடிய பொருட்கள் என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கபட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 3 க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாகின. இரண்டு படகுகள் முழுமையாக எரிந்து சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu