திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை
X
குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள தாழ்வான பகுதியினருக்கு எச்சரிக்கை.

கேரளாவில் பருவமழை தொடங்கி கனமழையாக நீடித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இந்த மழையானது மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனிடையே மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பறப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சியில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு அதிகமானால் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!