திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
X

திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து கெட்டுகிறது.

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் வழி மண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து கெட்டுகிறது.

தடுப்பு வேலிகளை தாண்டி பாயும் வெள்ளம் நடைபாதை, சிறுவர் பூங்கா, நிச்சல்குளம் என அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்து அடையாளம் காணமுடியாத அளவிற்கு வெள்ளம் பாய்ந்து செல்லுகிறது. இதனால் தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Tags

Next Story