9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் மீனவர் கைது

9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் மீனவர் கைது
X

பைல் படம்.

குமரியில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சைமன் 48. மீனவரான இவர் 4 ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவனை பல நாட்களாக மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி தனியாக வரும்படி அழைத்து வந்துள்ளார்.

அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடி கொண்டு இருந்த சிறுவனிடம் அத்துமீறலாக நடந்துள்ளார். இது சம்பந்தமாக சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க ஆத்திரமடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துகொண்டு கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் சைமனை பிடித்த கொல்லங்கோடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சைமனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்றும், தனக்கு பல நாட்களாக இந்த சிறுவன் மீது ஆசை இருந்ததால் இவ்வாறு நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!