குமரி மாவட்ட தாழ்வான பகுதிகளுக்கு தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை

குமரி மாவட்ட தாழ்வான பகுதிகளுக்கு  தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை
X
காட்டாற்று வெள்ள பெருக்கு காரணமாக தொடர் வெள்ள அபாய எச்சரிக்கையில் குமரி தாழ்வான பகுதிகள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் நீடித்து வரும் தொடர் கனமழை காரணமாக குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ள பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களான திருவட்டார், முஞ்சிறை, வைக்கலூர், பார்த்திபபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்