தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் செல்ல தடை

தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் செல்ல தடை
X

தொடர் கனமழையால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் காட்டாற்று வெள்ளம்.

ஆபத்து இருப்பதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சி அருகில் செல்ல பொது மக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாகவே பரவலான மழையானது பெய்து வருகிறது. இதனிடையே நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது.

மேலும் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது

இதனிடையே இந்த அணைகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு அருவி எங்கே இருக்கிறது என்பது தெரியாத அளவில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனிடையே அருவி அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்லவோ அருவியை பார்வையிடவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளத்தோடு அப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Tags

Next Story