தாெடர் கனமழை எதிராெலி: திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்

தாெடர் கனமழை எதிராெலி: திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்
X

கனமழையால் குமரியில் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கனமழையால் குமரியில் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகப்படுத்தபட்டு உள்ளது.

இதன் காரணமாக கோதையாறு, தாமிரபணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளதால் திற்பரப்பு அருவியிலும் நீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

சிறுவர் நீச்சல் குளம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்கிறது, தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!