கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர்: நகர்மன்ற தலைவராக பதவியேற்பு

கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர்: நகர்மன்ற தலைவராக பதவியேற்பு
X

ராணி.

கொல்லங்கோடு நகராட்சியில் கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர் ராணி நகர்மன்ற தலைவராக பதவியேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நான்கு நகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியின் நகர்மன்ற தலைவர் பதவி திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் திமுக தலைமையின் அறிவிப்பை மீறி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் நகராட்சிமன்ற தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த ராணி என்பவர் போட்டியிட்டார். அதன் படி கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்டு, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர் ராணி நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவராக பதவியேற்று கொண்டார்.

இவர் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பையும், கூட்டணி தர்மர்த்தையும் மீறி நகர்மன்ற தலைவராக பதவியேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story