சபரிமலையில் மகரஜோதி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மகரஜோதி தரிசனம்.
கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு பந்தள மகாராஜாவால் கொடுக்கப்பட்டு பந்தள அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வந்த திருவாபரணங்கள் கடந்த 12 ஆம் தேதி பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டு சபரிமலை சன்னிதானம் கொண்டுவரப்பட்டது.
இதனை தொடர்ந்து திருவாபரணங்கள் அய்யப்பன் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது, அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக காட்சியளித்த அய்யப்ப சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். மகரஜோதியை முன்னிட்டு சபரிமலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்ட நெரிசலை தடுக்க பம்பா, புல்மேடு, சன்னிதானம் உட்பட 10 இடங்களில் பக்தர்கள் மகரஜோதி தரிசனம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu