பணியின் போது மரணம்: ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கூற்றவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ஸ்(43 )18 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார்.
நேற்று பிற்பகல், குஜராத் மாநிலத்திலிருந்து பணி இடமாறுதலாகி, ஜம்மு -காஷ்மீருக்கு செல்லும் வழியில் உதம்பூர் பகுதியில் பொருட்களை, ராணுவ வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவரை மீட்ட சக வீரர்கள் உதம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டீபன்ஸ் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட உடல், இன்று அவரது சொந்த ஊரான திருவட்டாருக்கு கொண்டு வரப்பட்டு இராணுவ மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
இராணுவ வீரர் உடலுக்கு இராணுவ உயர் அதிகாரிகள், அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த எல்லை பாதுகாப்புபடை வீரரான ஸடீபன்ஸ் க்கு ஷெர்லின் மீனா என்ற மனைவியும் ஷெர்வின் என்ற மகனும் ஸ்டார்வின் பியோ என்ற மகளும் உள்ளனர். எல்லை பாதுகாப்புபடை வீரர் ஸ்டீபன்ஸ் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu