திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை
X
குமரி குற்றாலமான திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை மட்டுமே 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடக்கபடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் வார நாட்களில் மக்கள் அதிகம் கூடும் கடற்கரை பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூடவும் உத்தரவு பிறப்பித்து பொதுமக்கள் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களுக்கு பெயர் போன குமரி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு நீர்வீழ்ச்சி கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது இங்கு சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!