கொரோனா பரவல் எதிரொலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை

கொரோனா பரவல் எதிரொலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
X
கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் குமரி எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 136 ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை பரவல் தொடங்கியிருப்பதால் குமரி மாவட்டத்தில் தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாததால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்கிறது.

தற்போது கேரளாவில் நாளொன்றுக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதோடு, ஜிகா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்களின் தாக்கமும் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்திற்கு வரும் கேரள மக்களால் நோய் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதனிடையே மூன்றாம் அலை பரவல் மற்றும் கேரளாவில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் சோதனைகளை தீவிரபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil