குமரியில் அத்தப்பூ கோலத்தில் கொரோனா விழிப்புணர்வு: ஓணம் விழாவில் ருசிகரம்
குமரியில் ஓணம் கொண்டாட்டத்தில் கொரோனா வரைபடத்தை அத்தப்பூ கோலமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கேரள மக்களால் பிரபலமாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான ஓணப்பண்டிகை வரும் 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை குமரி மாவட்டத்தில் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பெரிய அளவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படாத நிலையில் இளைஞர்கள் ஒன்று கூடி ஒரு சில இடங்களில் மட்டும் ஓணப்பண்டிகையை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் வரைந்து கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை அடுத்த இராமவர்மன் புதுத்தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனாவின் வரைபடத்தை அத்தப்பூ ஓவியமாக வரைந்து பூக்களால் அலங்கரித்து வைத்துள்ளனர்.
இதனை அந்த பகுதியை சுற்றி உள்ள மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர், இளைஞர்கள் முன்னெடுத்த இந்த விழிப்புணர்வு அத்தப்பூ கோலம் பலரின் பாராட்டை பெற்று உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu