தொடர் கனமழை எதிராெலி: குமரி திற்பரப்பு அருவில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழை எதிராெலி: குமரி திற்பரப்பு அருவில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு
X

குமரி திற்பரப்பு அருவில் ஆர்ப்பரித்து காெட்டும் தண்ணீர்.

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

நேற்று அதிகாலை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் நீடித்து வரும் கன மழை காரணமாகவும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

இதன்காரணமாக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே அணைகளில் இருந்து பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 70 ஏக்கர் நிலபரப்பிலான விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, மேலும் பரளியாறு, கோதையாறு தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது, மழை தொடர்ந்து நீடித்தால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!