வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி முன்னாள் தலைவர் வீடு முற்றுகை
வேலை வாங்கி தருவாதாக மோசடி செய்த முன்னாள் பேரூராட்சி தலைவியின் வீடு முற்றுகையிட்டு போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி பாய் இவர் ஏழுதேசம் பேரூராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைவி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி காலம் முடிந்த உடன் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டு உறுப்பினராக உள்ளார்.
இவர் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் SMC கூட்டுறவு வங்கியின் குமரி மாவட்ட முதல் கிளையான தக்கலை வங்கியில் நிந்திரவிளை மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் இருந்து சுமார் இரண்டரை இலட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு பலமுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட குற்றபுலனாய்வு போலீசாரிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் கைக்குழந்தைகளுடன் முன்னாள் பேரூராட்சி தலைவி மேரிபாயின் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதிலும் தங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்யப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu