தனியார் விடுதியில் குமரியை சேர்ந்தவர் வெட்டிக்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தனியார் விடுதியில் குமரியை சேர்ந்தவர் வெட்டிக்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
X

விசாரணை நடத்தும் போலீசார்.

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் குமரியை சேர்ந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் அமைந்துள்ள சிட்டி டவர் என்ற ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றுபவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சார்ந்த ஐயப்பன். இன்று காலை அவர் தனது பணியில் இருந்தபோது அங்கு கையில் அரிவாளுடன் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், இவர் வெட்டிக் கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தம்பானூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!