கேஸ் லாரி மோதி விபத்து - நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேஸ் லாரி மோதி விபத்து - நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
X
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கேஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் இது குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

கேரள மாநிலம் கொல்லம், கொட்டாரக்கரை எம்சி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று காரை இடித்து தள்ளும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொல்லம் எம் சி சாலை வழியாக கோட்டயம் பகுதிக்கு கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழுந்து எதிரே வந்த காரை இடித்து நொறுக்கி வீசியது. அதிவேகத்தில் வந்த லாரி காரை இடித்து விட்டு நேராக வலதுபக்க நடைபாதையில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் முன்பகுதி முழுமையாக நெறுங்கி இருந்தாலும் காரின் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கேஸ் ஏற்றி வந்த லாரியின் டயர் பஞ்சர் ஆனதால் தான் லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. பஞ்சரான சக்கரத்துடன் லாரி ஓட்டுனர் வாகனத்தை நெடு தூரமாக ஓட்டி வந்ததால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் கொட்டாரக்கரை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பிராட்டியம்மன் தேரோட்டம்,சென்னிமலை கோவிலில் தீபங்களுடன் உற்சவத்தின் தொடக்கம்.