இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
X

சிசிடிவி கேமராவில் பதிவான இருசக்கர வாகன விபத்து காட்சி.

இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே வேங்கரை என்னும் பகுதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனிடையே அவர்களை மீட்ட பொதுமக்கள் இருவரையும் சிகிச்சைக்காக மலப்புறம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வேங்கரை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து குறித்த பதப்பதைக்க வைக்கும் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்