குமரியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

குமரியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
X

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குமரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 59 இடங்களில் வேட்புமனு தாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குளச்சல் குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் அஞ்சுகிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் உள்ளிட்ட 51 பேரூராட்சிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் அந்தந்த அலுவலகங்களில் இன்று காலை முதல் தொடங்கியது.

நாகர்கோவில் மாநகராட்சிக்கான வேட்புமனு தாக்கல் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கிய நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதே போன்று மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் 59 அரசு அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!