கேரளாவில் தனியார் பேருந்து வீட்டு சுவரில் மோதி விபத்து: 5 பேர் காயம்

கேரளாவில் தனியார் பேருந்து வீட்டு சுவரில் மோதி விபத்து: 5 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான பேருந்து. 

கேரளாவில், கட்டுபாட்டை இழந்த தனியார் பேருந்து வீட்டில் மதில் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பம்பாடு வழியாக வண்டூர் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, அதிவேகத்தில் வந்துள்ளது. வண்டுர், அம்பலப்படி அருகே வளைவான சாலை பகுதியில் வரும்போது , கட்டுபாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து அப்பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மதில் சுவரில் மோதியது.

விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், விபத்தில் பேருந்தின் முன் பகுதியில் இடது பக்கத்தில் இருந்த 5 பயணிகள் படு காயம் அடைந்தனர். இதனிடையே சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள், படுகாயம் அடைந்த 5 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த மலப்புரம் போலீசார் பேருந்தின் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture