ஆழ்கடலில் படகு மூழ்கி விபத்து: அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய 13 மீனவர்கள்

ஆழ்கடலில் படகு மூழ்கி விபத்து: அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய  13 மீனவர்கள்
X

பைல் படம்

ஆழ்கடலில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதில் குமரியை சேர்ந்த 13 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த யேசுதாஸ் உட்பட கேரளாவை சேர்ந்த 13 மீனவர்கள் லட்சத்தீவு பதிவெண் கொண்ட மபுரோக் என்ற விசைப்படகில் கடந்த மாதம் 28 ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் குமரி ஆழ்கடல் பகுதியில் சுமார் 120 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த 22 ம் தேதி பிற்பகலில் படகின் அடிவாரத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடல்நீர் படகிற்குள் புகுந்து படகு கடலில் மூழ்கியது.இதனால்அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த படகில் இருந்த மீனவர்களிடம் உதவி கோரியதையடுத்து, மீனவர்களை தங்களது படகில் ஏற்றி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இந்த படகு நடுக்கடலில் மூழ்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!