குமரியில் உருக்குலைந்த சாலைகள்: பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

குமரியில் உருக்குலைந்த சாலைகள்: பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள்.

குமரியில் உருக்குலைந்து கிடக்கும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் முதல் சாதாரண சாலைகள் வரை உள்ள அனைத்து சாலைகளும் ஜல்லிகள் பெயர்ந்து உருக்குலைந்து குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படுகிறது.

இந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு எந்த நிதியும் ஒதுக்காமல் இருப்பதை கண்டித்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும், இன்று பாஜகவினர் சார்பில், குமரி மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, மேல்புறம் சந்திப்பு பகுதியில், மேல்புறம் ஒன்றிய தலைவர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமான பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராகவும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!