குமரி ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக உறியடி திருவிழா
நித்திரவிளை அருகே உள்ள கூக்கபொற்றையில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக உறியடி திருவிழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கூக்கபொற்றையில் அமைந்துள்ளது ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பஜனை பட்டாபிஷேக உறியடி திருவிழா சிறப்பு பெற்றது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பஜனை பட்டாபிஷேக உறியடி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. இந்த உறியடி நிகழ்வில் கண்ணன் வேடமணிந்த நபர் ஒரு மணி நேரத்திற்கு மேல் நய்யாண்டி மேளத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு வகையான நடனங்கள் ஆடி மக்களை மகிழ்வித்தார்.
தொடர்ந்து அந்தரத்தில் பறந்த உறி பானையில் நிரப்பப்பட்டிருந்த நெய், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் அடங்கிய உறியை போராடி பிடித்து கண்ணன் விக்ரகம் வைக்கப்பட்டிருந்த தேரில் ஒப்படைத்து கண்ணனுக்கு தீபம் காட்டினார். இந்த நிகழ்வை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu