கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்
X

சொகுசு காரில் கேரளாவிற்கு கடந்த இருந்த ஆயிரம் லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை.

குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணையை சொகுசு காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சிராயன்குழி பகுதியில் சோதனையின் போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர், ஆனால் அதிகாரிகள் நிற்பதை கண்டதும் சொகுசு கார் நிற்காமல் சென்றது.

இதனை தொடர்ந்து சொகுசு காரை துரத்தி சென்ற போது குறுக்கு சந்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து வாகனத்தை வட்டாட்சியர் சோதனை செய்தபோது 25 கேன்ங்களில் சுமார் 1000 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மண்ணெண்ணை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!