குமரியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

குமரியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர் பால்ராஜ்.

குமரியில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுநராக புதுக்கடை அருகே பரக்குடிவிளை பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் செல்லும் பேருந்தை இயக்கி உள்ளார், அந்த பேருந்தில் மார்த்தாண்டத்தில் இருந்து இரண்டு நபர்கள் பயணிகளாக வந்துள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் இருந்த நிலையில் பேருந்தில் ஏறியதில் இருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டபடி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறி உள்ளனர். அதற்கு இசைந்த நடத்துனர் பேருந்தை நிறுத்த விசில் ஊதிய நிலையில் ஓட்டுநரும் பேருந்தை நிறுத்தி உள்ளார். ஆனால் இருவரும் பேருந்தை விட்டு இறங்காமல் அடுத்த இடத்தில் இயங்குவதாக கூறி தொடர் பயணம் செய்து இரண்டு மூன்று இடங்களில் இதே போன்று பேருந்தை நிறுத்தி இறங்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் பேருந்து சடையங்குழி பகுதியில் வரும் போது மீண்டும் பேருந்தை நிறுத்த கூறி நிர்பந்தம் செய்யவே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் போய் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பயணிகளும் ஓட்டுநர் பரமேஸ்வரனை சரமாரியாக தாக்கிய உள்ளனர், இதனை தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நேராக கருங்கல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடி உள்ளார். ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் பறையன்விளை பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பதும் தப்பி ஓடிய நபர் பைங்குளம் அருகே வெட்டை பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்ததோடு தப்பி ஓடிய காளிதாஸை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா