முப்படை தலைமை தளபதி மரணம் குறித்து பொய் பிரச்சாரம் செய்த வாலிபர் கைது

முப்படை தலைமை தளபதி மரணம் குறித்து பொய் பிரச்சாரம் செய்த  வாலிபர் கைது
X
முப்படைகளின் தலைமை தளபதி வீர மரணம் அடைந்த விபத்து குறித்து பொய் பிரச்சாரம் செய்த குமரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி உட்பட 13 பேர் வீர மரணம் அடைந்தனர்.இந்நிலையில் இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக கூறும் பதிவு சமூக வலைதளத்தில் பரப்பியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பதிவை சமூக வலைதளங்களில் பரப்பியது கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் என்பது தெரிட வந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது 153A, 505/1 b, 504 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்