குமரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.15 ஆயிரம் பணம் பறிமுதல்

குமரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.15 ஆயிரம் பணம் பறிமுதல்
X

களியக்காவிளை சோதனை சாவடி.

குமரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 15000 ரொக்க பணம் பறிமுதல்.

தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படும் கற்கள், பாறைபொடி உள்ளிட்ட கனிமவளங்கள் குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் உள்ள போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து சர்வ சாதாரணமாக கேரளாவிற்கு அனுமதியின்றி கடத்தப்பட்டு வருகிறது.

இதே போன்று அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களாக கட்டுக்கடங்காமல் இருந்து வரும் கனிம வளம் கடத்தல் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தும் சோதனை சாவடியில் உள்ள போலீசார் துணையுடன் கடத்தல் படுஜோராக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை காவல்துறை சோதனை சாவடிகளில் லஞ்சம் கொடுத்துவிட்டு கடத்தல் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர்பாலுக்கு கிடைத்த தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இருவர் லஞ்சம் கொடுத்த போது அதனை சோதனை சாவடி போலீசார் வாங்கிய போது அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சிறிய சிறிய கட்டுகளாக கட்டி புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட 15000 ருபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பணியில் இருந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் ஒருவர் என மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare products