/* */

மது போதையில் தகராறு: அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பி கைது

குமரியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மது போதையில் தகராறு: அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பி கைது
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே அணஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங், 32 வயதான இவருக்கு ராஜேஷ் என்ற தம்பி உள்ளார். இவர்களது தந்தை இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கும் தாயாருக்கு வேண்டிய வேலைகள் அனைத்தையும் ராஜேஷ் செய்து வைத்துவிட்டு கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

ஆனால் அண்ணன் ஜெயசிங் வேலைக்கு ஏதும் செல்லாமல் அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் ராஜேஷ் சமைத்து வைத்திருக்கும் உணவுகளை சாப்பிட்டு ஊதாரித்தனமாக இருந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஜெயசிங் மற்றும் ராஜேஷ் இருவரும் மது குடித்துவிட்டு வந்து மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஆவேசமடைந்த ராஜேஷ் அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஜெயசிங்கின் கழுத்தில் வெட்டி உள்ளார். இதில் ஜெயசிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்துள்ளார், இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஜெயசிங்கை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது சம்பந்தமாக ஜெயசிங் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கருங்கல் போலீசார் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?