கேரளா விசைப்படகுகளால் பாதிப்பு: குமரியில் மீனவர்கள் போராட்டம்

கேரளா விசைப்படகுகளால் பாதிப்பு: குமரியில் மீனவர்கள் போராட்டம்
X
குமரி கடல் பகுதியில் கேரள மாநில பதிவெண் கொண்ட விசைப்படகுகள் மீன் பிடிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி மீனவர்கள் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பல காலமாக கேரள பதிவெண் கொண்ட விசைப்படகுகள் வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் ஆவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினார்.

மேலும் கேரளா வியாபாரிகள் அவர்களது மீன்களை இங்கு விற்பனை செய்து செல்வதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

அதேபோன்று இனையம் மற்றும் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த பதிவெண் பெறாத சுமார் 500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் சட்டபடியாக பதிவு செய்து மண்ணெண்ணெய் டீசல் உள்ளிட்ட மானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பல வருடங்களாக சேதமடைந்து கிடக்கும் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை சீர்செய்து உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக பைபர் படகு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!