உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை, கலெக்டர் அறிவுரை
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்த உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைதுறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை மூலம் பெறப்படும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுப்பணித்துறை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, பழுதடைந்த சாலைகளை செப்பனியிடும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu