கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதல்
X
By - A. Ananthakumar, Reporter |16 April 2022 4:30 PM IST
கேரளாவில், கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதி முதியவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
கேரளா மாநிலம் மலப்புறம் அருகே கொண்டோட்டி என்னும் பகுதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இரு சக்கர வாகனம் மோதியதில் அந்த முதியவர் சாலையின் ஓரம் தூக்கி வீசபட்டுள்ளார். மலப்புறத்திலிருந்து, கோழிக்கோடு செல்வதற்காக அதி வேகத்தில் இருக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் சாலையில் விழுந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu