இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்து - இருவர் படுகாயம்

இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்து - இருவர் படுகாயம்
X
குமரியில், இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோ மீது, இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

வாகனங்கள் இரண்டும் மோதிய வேகத்தில், ஆட்டோவின் முன்பக்கம் முழுவதும் உடைந்து சேதம் அடைந்தது. அதேபோல் இருசக்கர வாகனமும் சுக்குநூறாக நொறுங்கியது. தற்போது இந்த விபத்து குறித்த பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!